Monday, October 25, 2010

நான் அப்பா

இருசக்கர வாகன பயணத்தின்போது
பருவமெய்திய மார்பகங்கள் என் முதுகில்
அழுத்தியபோதும் என்னுள் விரசமோ தாபமொயில்லை
ஆதலினால் நான் அப்பா !!!!!!!!

Tuesday, October 12, 2010

முதல் பார்வை

மாலை நேர மஞ்சள் வெயில்
உன் நினைவுகளோ என்னுள் இன்னும் பச்சை பசேல் !
முதல் நாள் உன்னை பார்த்த ஓர் கணம்
கணமாகியது(நோய்வாய்ப்படுதல்) என் உடல் !
என் கண்ணோ !  நிறக்குருடு இல்லை உருவகுருடானது
உன்னை தவிர அதற்கு பிரித்தறிய தெரியவில்லை  
எதிலும் உன் உருவம்  !!
தொட்டில் குழந்தையின் கடவுள் கண்ட சிரிப்பு
என் உதட்டிலும் உன்னை கண்டவுடன் !!
என் இதயமோ அதன் இசை(லப் டப் ) மறந்து
உன் பெயரை இசையாக்கி கொண்டது !!!
என் சுவாசமோ உன் சுவாசத்தை
இனம் கண்டு கொண்டது !!
உள்ளிருந்த வியர்வைத் துளியும்
உன்னை பார்க்க வெளியே வந்தது !!
என் உடம்பிலுள்ள அனைத்து பாகங்களும்
உன்னுடைய அனிச்சை செயலாகியது !!
இப்படியாக புவி ஈர்ப்பு என்னுள் அற்று கொள்ள
காற்றில் அலைந்தேன் நான் !!

Wednesday, October 6, 2010

அவள் என் காதலி

உன்னை பற்றி எழுதலாம் என்று பேனா எடுத்தேன்
அது வாசனை திரவியம் போட்டு கொண்டது !!!!!
முள்ளோ தன் ரத்தத்தை காதல் பரிசாக கொடுத்தது !!!!!!
பசியோடு இருந்த பேனாவோ நிறுத்தாமல் எழுதி கொண்டீருக்கிறது !!!!!
தமிழ் எழுத்துக்களோ பொட்டு வைத்து வளையல் சூடி
உன்னோடு போட்டி போட்டது !!!!!
துணைகாலோ உன்னோடு துணையாய் இருக்குறேன் என்று
கர்வபட்டுகொண்டிருக்குது !!!
பேப்பர் ரோ உன்னை தாங்குவது போல்
இறுமாப்புடன் இருக்கிறது !!!!!
அனைவரிடமும் உரக்க சொன்னேன்
அவள் என் காதலி  என்று !!!!!!!!!!!

அவள் பார்வையில்

என்னை பார்க்கையில் அவள் தலை குனிந்தாள்
      நான் நிமிர்ந்தேன் ஆண்மகன் என்று !!!
என்னை பார்க்கையில் உதட்டின் விளிம்பில் சிரித்தாள்
     நான் நினேத்தேன் அவளது நண்பன் என்று !!!
என்னை பார்க்கையில் நேரே நிமிர்ந்து பார்த்தாள்
   நான் நினேத்தேன் அவளிடம் நெருங்கிவிட்டோம் என்று !!!
என்னை பார்த்தவுடன் எனகருகே வந்து கூறினாள்
     அண்ணா !!! உங்களை பார்த்திருக்கிறேன் என்று !!!
ஏழாவது அறிவு செய்கை மொழி
        அறிமுகப்படுத்தி  விட்டாள் எனக்கு !!!!!!!!!

ஈழம்

ஆழமாக புதைக்கப்பட்ட ஓர் வார்த்தை  !
ஆழமாக புதைக்கப்பட்ட கனவு !!
ஆழமாக புதைக்கப்பட்ட பல உயிர்கள் !!!
ஆழமாக புதைக்கப்பட்ட கொள்கைகள் !!!!
ஆழமாக புதைக்கப்பட்ட உரிமைகள் !!!!!
ஆழமாக புதைக்கப்பட்ட கற்புகள் !!!!!!
ஆழமாக புதைக்கப்பட்ட ஓர் இனம் !!!!!!!!
புதைத்தல் தானே முதல்படி முளைப்பதற்கு
சந்தோசம் கொள்வோம் முதல்படி வெற்றி என்று !!!!

ஆம் ! பூமித்தாய் உள்ளே உள்ளோம் குழந்தையாய்
சுவாசிப்போம்  பூமித்தாய் காற்றை !!
உண்போம் பூமித்தாய் உணவை !!!
முண்டுவோம் வெளிவர !!!
தொப்புள்கொடி அறுத்து சிகப்பு அழுகையாய் வெளிவருவோம் !!!!!!

நான் மகான் அல்ல

மதுரை பேருந்து நிலையம்
புதுப்பட குறுந்தகடு 
திருட்டுத்தனமாய் கேட்டேன் ஓர் கடையில்  !!!
வெளிப்படையாய் கொடுத்தான் , கேட்டேன் அவனிடம் !!!!
உரிமம் உள்ளது திருடுவதற்கு என்றான் !!!!!
நான் மகான் அல்ல குறுந்தகட்டை கேட்டேன்
கெடைக்காது என்றான் , ஏன் என் வினா ?
அது அப்படித்தான் பதில் !!
பயந்தேன் மதுரையும் அப்படி ஆகிவிடுமோ(!!!) ??

நிதானத்தில் நினைத்து கொண்டேன்
                              நானும் மகான் அல்ல !!!!!!

Monday, October 4, 2010

பொறாமை

நேற்று பெய்த மழை
சாலையோரம் குட்டி ஓடைகள்
என்னவள் தாவி தாவி கடந்தாள் ஓடையை
என்னவளின் கொலுசு சத்தத்தால்
ஓடையின் நித்திரை கலைந்தது !!!!!!!
அதனுள் சிறு சலனம் வரி வரியாய்
விழித்த ஓடை பொறாமையுடன் கொலுசுவிடம்
சொன்னது நீ அதிர்டசாலி  !!!
அவளின் கால்களை தொட்டுகொண்டிருக்கிறாய் எப்பொழுதும் !!!
அப்பொழுதுதான் கொலுசுவிர்க்கு புரிந்தது தான்
துருபிடிப்பது எதற்கு என்று !!!!!!!

கன்னி

வீட்டில் சன்னலோரம் மழையை ரசிதுருந்தேன்
தெருவில் என் மழைகால பால்ய சினேகிதி குடையுடன்
கேட்டேன் !  மழையுடன் என்ன சண்டை ?
அவள் பதில் நான் பூப்படைந்துவிட்டேன் !!!!!!!!

Sunday, October 3, 2010

பெண்மை

பெண்மை ! உலகின் ஆதி சக்தி வடிவே !!!
செந்நீரில் குளிப்பாட்டி அடுத்த
தலைமுறையை உருவாக்கும் பெண்மையே !!!

உன் கண்ணீரால் பிரபஞ்சத்தே
மாற்றவல்ல பெண்மையே !!!

கோடி இலக்கியங்கள் உலகில்
உருவாக வித்திட்ட பெண்மையே !!!

                         இன்னும் தொடரும் .........

மழையே !!!!!!

மழையே !! ஏன் மின்னலோடு  வருகிறாய்
பூமிக்கு வெளிச்சம் காட்டவா !!!!!

உன் வருகையை கறுப்புக்கொடி காட்டி எதிர்க்கும்
மக்களை பார்த்து பூமியும் அழுகிறதோ ?
கண்ணிர் ரோட்டிலிருந்து தாரை
தரையாய் பள்ளதிருக்கு  செல்கிறது !!!!!

மழையே !!  நியும் ஓர் சர்வதிகாரி !
இடி, மின்னல் துணைகொண்டு
கருப்பு கொடி காட்டியவரை வீட்டுக்குள் விரட்டுகிறாய் !!!!

Friday, October 1, 2010

முதல் ஓட்டு

முதல் ஓட்டு


ஓட்டு சாவடி முன்பு
வரிசையில் நான் !
நினைவில் வேட்பாளர்கள்
கட்சிகள் , கொள்கைகள்(?) !

கட்சி பாகுபாடு இன்றி
இலவசம் அதுதான் முதல் கொள்கை !

ஓர் கட்சியில் வேட்பாளர்
முகம் யாரென்று தெரியவில்லை

ஓர் கட்சியில் வேட்பாளர்
முன்னால் மற்றும் இந்நாள் தொழிலதிபர்
( தொழில் யாதென்று ஊருக்கு தெரியும் !)

ஓர் கட்சியில் தலைவர் தவிர 
மற்றவர்கள் ரசிகர்கள் (?)

முவரும் அவர்கள் செயல்பாடுகளை
விநியோகம் செய்யாமல்
அவர்கள் முத்திரயை
விநியோகம் செய்தார்கள்
பாவம்  நான்  !

முத்திரையில் எப்படி அவர்கள்
முகத்திரை காண்பது !


தேசிய மொழி எதிர்த்தவரின்
புதல்வன் மொழி தெரியாமல்
பாராளுமன்றத்தில் காணாமல் போகிறார்
அவருக்கா  என் முதல் ஓட்டு ?

அனைத்து துறைகளிலும்
உறவினர்களை பரவ செய்தவர்க்கா
என் முதல் ஓட்டு ?

இலவசங்களை கொடுத்து
இனத்தின்  உழைப்பை மலிங்க
செய்பவருக்கா என் முதல் ஓட்டு ?

கட்சியின் சின்னம் வைத்து
பரிச்சயமற்ற வேட்பாளரை வைத்து
இன்று வரை ஓட்டு கேட்கும்
அவருக்கா  என் முதல் ஓட்டு ?

தோற்றுவித்தவர் பெயர் வைத்து
திட்டங்கள் இன்றி
ஒதுக்குபுறமாய் அடிகடி ஓய்வெடுத்து
அவருக்கா  என் முதல் ஓட்டு ?

நான்தான் அவர் , நிறம் தான்
மாறி உள்ளது என்று கூறும்
அவருக்கா  என் முதல் ஓட்டு ?

கொள்கை இன்றி
மாற்று கட்சி தேவை என்று
தன்னோடும் மற்றவருக்கும் சொல்லும்
அவருக்கா  என் முதல் ஓட்டு ?

குறிப்பிட்ட வயது வந்தவுடன் ஓட்டு
போடவேண்டும் , புரியவில்லை வயது வரம்பு
இந்த புதிர்களால் !

ஓட்டு போடுவது உரிமை , கடமை
சட்டம் யற்றியது ஓர் அரசியல் கட்சி
கண்டிப்பாக நோக்கம் உள்ளது !

வரிசை நகர்ந்து உள்ளே வந்துவிட்டேன்

ச்சே ! இவ்வளவு போராட்டமா ?

49 "ஒ" போட்டு விடலாம்

கேட்டேன் பூத் எஜன்ட்விடம்
என்ன ? திரும்ப என்னிடமே கேள்வி கேட்டான்  !

சரி கண்ணை மூடி பொத்தானை அழுத்தலாம் என
வாக்காளர் பதிவை சரிபார்த்தேன்
எனது ஓட்டு காலை 8  மணிக்கே
பதிவாகி விட்டது ! அப்பாடா !!!!!!!!!!!!!!!!