Saturday, June 16, 2012

பூர்ணமாகிவிட்டேன் ! ! !






உன்னை வர்ணிக்க ஆசைப்பட்டேன்
மூன்றாம் உலகப் போர் மூண்டுவிட்டது
உன்னுடன் உலவும் பொருட்களுக்குள் !!!

வெயிலோ ? மழையோ ? குடை பிடிக்காதே
பார் !! அக்னியும் , புயலும் உன்னை
தொட முடியாத வஞ்சத்தில் !!

மழை வேளையில் வெளியில்
வரதே ! பார் , வானவில் என்று
மேகங்களும் கலைந்து விட்டது !!!

தினமும் பார்க்காதே , பார் !!
காட்சித்திரையும்(monitor) ஒல்லியாகிவிட்டது
உடற்ப்பயிற்சி செய்து !!!

நீ அணைத்து கொள்ளும்
பரவச நொடி !! அலைபாயும்
சுட்டு குறி (mouse pointer) விளக்கிக்கொண்டியிருக்கிறது !!!

புள்ளி கோலம் போடப்படுவதில்லை உன்
வீட்டில் ! ரங்கோலியாய் நீ இருக்கையில் !!

சூரியனும் உன்னை தொட்டுப்பார்க்க
ஆசை ! விளைவு ஓசோனில் ஓட்டை !!!

காற்றில் நைட்ரஜன் அதிகமாம்
பின்னே ! நீ சுவாசித்த காற்று
பிறரிடம் செல்ல மறுத்ததினால் !!!

மின்சார பற்றாகுறையாம் உலகெங்கும்
முட்டாள்கள் ! உன் விழி இமை அசைவை
கண்டதில்லை போலும் !!!

உன் நினைவை மறக்க முற்பட்டேன்
பிழை ! ஆலமரமானது எல்லா உயிர்
கிளைகளிலும் உன் நினைவின் வேர் !!!

இரவின் பூர்ணம் பௌர்ணமி !
பகலின் பூர்ணம் வெளிச்சம் !
நதியின் பூர்ணம் கடல் !
கடலின் பூர்ணம் மேகம் !
வாழ்வின் பூர்ணம் காதல் !
காதலின் பூர்ணம் வலி !
அதை எனக்கு பரிசளித்த நீ பரிபூர்ணம் !
சகியே ! நன்றி உன்னால் பூர்ணமாகிவிட்டேன் !!!