Saturday, April 27, 2013

பரிசுத்தம் - ஒரு தலை காதல்



தன்னை கடக்கும் ரயிலை
பார்த்து தினமும் ! புன்முறுவலாய்
கையசைக்கும் மழலையோ !!!

ஓர் புயலில் வேரறுக்கப்பட்டு மீண்டும்
நட்டபின் தென்றலை  பார்த்து
தலையசைக்கும் ஆலமரமோ !!!

கார்முகிலை கண்டவுடன் தன்னிலை
மறந்து தோகை விரித்து பரவசமாகும்
அழகு மயிலோ !!!

அருகருகில் இருந்தும் கண்ணாடியில்
வடமிருந்து இடமாக ! இடமிருந்து வலமாக
பார்க்கப்படும் ஓர் நொடிக்காக .
காத்திருக்கும் கண்களோ !!!!

தன்னிடமிருந்து பறிக்கப்படும்
ஒவ்வொரு பூவுக்கும் கண்ணிர்
பால்வடிக்கும் காம்போ !!!

ஞாயறு கீற்றின் ஒவ்வொரு துகளின்
பார்வையும் தன்னுடைய திசையாய்
மாற்றிக்கொள்ளும் சூர்யகாந்தியோ !!!

பல்முளைத்த குழந்தையால் முலையில்
வலியெடுக்கும் என்றறிந்தும் தாய்மை
விரும்பும் பெண்மையோ !!!

இவையனைத்தும் பரிசுத்தம் என்றால் !
இவையனைத்தும் ஒரு தலை காதல் என்றால் !
கர்வமாக சொல்வேன் உன்மீது நான் கொண்டதும்
பரிசுத்தமான -ஒரு தலை காதல்  !!!!