Monday, August 12, 2013

எது சுதந்திரம் ?காந்தியை கொடுத்து பெற
முடிந்தது  மது கடைகளில் !! அகிம்சை !!

சாதி ,மத பேதமின்றி இணைந்தோம்
திரையரங்குகளில் மட்டும் !! ஒருமைப்பாடு !!

வெவ்வேறு பெயர்களில் ஊழல்
வேற்றுமையில் ஒற்றுமை !!

இரும்பில் சேலையுடுத்த கற்று கொடுத்தோம்
பெண்களுக்கு ,ஏன் பாரத மாதாவிற்கே !! மனிதம் !!

ஆன்மாவை விபச்சாரம் செய்தோம்
குடும்ப நல வழக்குகளில் !! சகிப்புதன்மை !!

இருநூற்று ஐம்பது கோடி வெளிச்சம் இருந்தும்
கடன் பெற்றோம் அந்நிய தேசத்தில் !! சுதேசி !!

விளையாட்டு வெற்றிக்களிப்பில் மட்டும்
பயன்படும் வார்த்தை !! தேசப்பற்று !!

ஓர் நாள் விடுமுறை குழந்தைக்கு !!
ஓய்வு நாள் பெரியவர்க்களுக்கு !!
புது படம் பார்க்க மற்றும் ஒரு நாள் இளைஞர்களுக்கு !!
தொலைக்காட்சி முன்பு பெண்கள் !!
கடமைக்காக கொடியேற்றும் அரசு ஊழியர்கள் !!
பதவிக்காக உரையாற்றும் அரசியல்வாதிகள் !!
இதுவா  சுதந்திரம் ? அப்படியெனில் இனிதே
கொண்டாடுவோம் பெற்ற சுதந்திரத்தை !!!

ஜெய் ஹிந்த் !!!
Saturday, April 27, 2013

பரிசுத்தம் - ஒரு தலை காதல்தன்னை கடக்கும் ரயிலை
பார்த்து தினமும் ! புன்முறுவலாய்
கையசைக்கும் மழலையோ !!!

ஓர் புயலில் வேரறுக்கப்பட்டு மீண்டும்
நட்டபின் தென்றலை  பார்த்து
தலையசைக்கும் ஆலமரமோ !!!

கார்முகிலை கண்டவுடன் தன்னிலை
மறந்து தோகை விரித்து பரவசமாகும்
அழகு மயிலோ !!!

அருகருகில் இருந்தும் கண்ணாடியில்
வடமிருந்து இடமாக ! இடமிருந்து வலமாக
பார்க்கப்படும் ஓர் நொடிக்காக .
காத்திருக்கும் கண்களோ !!!!

தன்னிடமிருந்து பறிக்கப்படும்
ஒவ்வொரு பூவுக்கும் கண்ணிர்
பால்வடிக்கும் காம்போ !!!

ஞாயறு கீற்றின் ஒவ்வொரு துகளின்
பார்வையும் தன்னுடைய திசையாய்
மாற்றிக்கொள்ளும் சூர்யகாந்தியோ !!!

பல்முளைத்த குழந்தையால் முலையில்
வலியெடுக்கும் என்றறிந்தும் தாய்மை
விரும்பும் பெண்மையோ !!!

இவையனைத்தும் பரிசுத்தம் என்றால் !
இவையனைத்தும் ஒரு தலை காதல் என்றால் !
கர்வமாக சொல்வேன் உன்மீது நான் கொண்டதும்
பரிசுத்தமான -ஒரு தலை காதல்  !!!!


Saturday, June 16, 2012

பூர்ணமாகிவிட்டேன் ! ! !


உன்னை வர்ணிக்க ஆசைப்பட்டேன்
மூன்றாம் உலகப் போர் மூண்டுவிட்டது
உன்னுடன் உலவும் பொருட்களுக்குள் !!!

வெயிலோ ? மழையோ ? குடை பிடிக்காதே
பார் !! அக்னியும் , புயலும் உன்னை
தொட முடியாத வஞ்சத்தில் !!

மழை வேளையில் வெளியில்
வரதே ! பார் , வானவில் என்று
மேகங்களும் கலைந்து விட்டது !!!

தினமும் பார்க்காதே , பார் !!
காட்சித்திரையும்(monitor) ஒல்லியாகிவிட்டது
உடற்ப்பயிற்சி செய்து !!!

நீ அணைத்து கொள்ளும்
பரவச நொடி !! அலைபாயும்
சுட்டு குறி (mouse pointer) விளக்கிக்கொண்டியிருக்கிறது !!!

புள்ளி கோலம் போடப்படுவதில்லை உன்
வீட்டில் ! ரங்கோலியாய் நீ இருக்கையில் !!

சூரியனும் உன்னை தொட்டுப்பார்க்க
ஆசை ! விளைவு ஓசோனில் ஓட்டை !!!

காற்றில் நைட்ரஜன் அதிகமாம்
பின்னே ! நீ சுவாசித்த காற்று
பிறரிடம் செல்ல மறுத்ததினால் !!!

மின்சார பற்றாகுறையாம் உலகெங்கும்
முட்டாள்கள் ! உன் விழி இமை அசைவை
கண்டதில்லை போலும் !!!

உன் நினைவை மறக்க முற்பட்டேன்
பிழை ! ஆலமரமானது எல்லா உயிர்
கிளைகளிலும் உன் நினைவின் வேர் !!!

இரவின் பூர்ணம் பௌர்ணமி !
பகலின் பூர்ணம் வெளிச்சம் !
நதியின் பூர்ணம் கடல் !
கடலின் பூர்ணம் மேகம் !
வாழ்வின் பூர்ணம் காதல் !
காதலின் பூர்ணம் வலி !
அதை எனக்கு பரிசளித்த நீ பரிபூர்ணம் !
சகியே ! நன்றி உன்னால் பூர்ணமாகிவிட்டேன் !!!

Tuesday, April 26, 2011

" தல" பிறந்தநாள் வாழ்த்துஅடையாளங்களை தேடி அலையும் உலகில்
தன் அடையாளத்தை துறந்தவனே!!!

தன்மன வலிமையால் விதியும்  உன்னிடம்
தோற்கச் செய்தவனே  !!!

மனதிலும் உடம்பிலும் காயம்தான் ஆனால்
எல்லோர் உள்ளம் மகிழ செய்பவனே  !!!

பிரசவத்தின் வலியை குழந்தையின் அழுகையில்
மறக்கும் அன்னைபோல் !! உன் உடலின் வலியை
எங்களின் சந்தோஷத்தில் மறந்தவனே!!!

நெற்றிக்கண் திறந்தாலும் தன் மனதில் உள்ளதை
உண்மை நிலையை சபைதனிலே  சொல்ல தயங்காதவன்  !!!

தொடர் தோல்வியென்று   எதிரிகள் சிரித்தார்கள்
உலகம் முழுதும் மக்களின் மனதை
வெற்றி கொண்டதை அறியாமல் !!!

காதிலில் அவன் கட்டியதோர் கோட்டை
இன்றும் எவர் நினைத்தாலும் அழிக்க முடியாது 
அவனின் அன்பு கோட்டை !!!

வெற்றி ஆழிச்சுழியில் புதையாமல்
தோல்வியென்ற நங்கூரத்தால்
மக்கள்யெனும் தோணியில்
உழைப்பென்ற துடுப்பால்
தரணி ஆளும் "தல"(லை)வன் !!!

திருக்குறள் :

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.


Sunday, February 6, 2011

காதல் பாஷை

சகியே ! நீயில்லாத நிமிடங்களில்
பிரபஞ்சமும் விதவைபோல்
வெள்ளையாய் வெறுமையாய் தெரியுதே !!!

உள்ளாடைகளால் அந்நியப்பட்ட
சேலைப்போல் பிரபஞ்சத்தில்
ஒட்டாமல் நான் !!!

உன் புகைபடத்துநுடையே
களிதுருந்தேன் இரவெல்லாம் ஆம் !
ரப்பரில் மகிழ்ச்சியுறும் குழந்தைப்போல !!!

சூரியனை  விழுங்கும் சந்திரன் போல்
 சகியே ! எப்பொழுது நம்  பானிகிரகணம் !!!

 ஜாதகத்தில் சுக்கிரன் ஐயிந்தாவது
 கட்டத்தில் வந்துவிட்டதாம் , நான்
 உன் வட்டத்தில் சுழல்வதை அறியாத ஜோசியர் !!!

  ரத்த தானம் செய்ய மறுத்தேன்
 ஆம்  !  குருதியில் சுருதியாய்
 கலந்துவிட்ட உன்னை இழக்க மனமில்லாமல் !!!

 ஆளில்லாத சாலையில்
வண்டியிலுருந்து  இடறினேன்
அப்பா கோபம்கொள்ள !
அம்மா அணைத்துக்கொள்ள !
வலியோடு நகைத்தேன் நாளை
நீ இடும் கையெழுத்துக்காக !!!

சகியே ! இந்நேரம் பூலோகமே
உன்னிடம் மண்டியிற்றுக்கும் என்
காதலை நீ கற்றுணர !!!

போதும் தனிகையே !  சொல் குலியே !
பொங்கி நிற்கும் கண்ணீரா ?
பாரமாய் வர துடிக்கும் கவிதையா ?
உதட்டோரம் எனக்காக காத்திருக்கும் சிறுநகையா ?
நிலம் பார்க்கும் உன் விழிகளா ?
உன் காதல் இதில் எந்த பாஷை ? !!!
Friday, December 10, 2010

தொடக்க புள்ளியாய்

ஆடைகளைந்து அம்மனம்மாக்கினாய்
வீரத்தை ஆடைகொண்ட எங்களை !!

மானபங்கப்படுத்த முயற்சி செய்தாய்
இனமானம் பெரிதுப்பெற்ற எங்களை !!

பேறு பெற செய்தீர்கள் ஒரே
புதைகுழியில் உறக்கம் கொடுத்து !!

உடம்பில் பொழிந்தது பூக்களாய் இன
சல்லடையால் பிரிக்கப்பட்ட உங்கள் குண்டுகள் !!!

பாராட்ட தவறியதுயில்லை , நன்றி !!!
எங்கள் இனங்களை ஓர் புள்ளியாய்
ஒரே புதைகுழியில் இணைத்ததற்கு !!!

நாங்கள் நன்றி கேட்டு பெற
இன்னொரு புள்ளியாய் தொடருவோம் !!

Monday, November 1, 2010

என்ன தவம் செய்தேன்

சூரியன் பற்பசைக்கு விளம்பரம்
செய்து கொண்டீருக்கும் வேளை !!!
நீ தந்து போன முத்தத்தை கவர்ந்து
விடுவனோ? என்று பதறி எழுந்தேன்   !!!

அருகில் நீ வைத்துபோன  தேநீர் கோப்பையுடன்
பரிசு !!! நினெவுலகில் முழுவதும்  நீ
நான் மறந்தேன் என்னை !!!

பெண்மைக்கு இலக்கணம் கொடுத்து
நம்பிக்கைக்கு உன்னை கொடுத்து
தந்தையின் அன்பை பிறழசெய்த தாயுமானவனே
என்ன தவம் செய்தேன்
 நான் உன்னை பெற !!!!!


ஆத்மா கலந்து
மௌனம் பிறந்து
கண்களால் உன்னுடன் பேசிய
ஒவ்வொரு வினாடியும் தேவ வினாடிகள்
என்ன தவம் செய்தேன்
நான் உன்னை பெற !!!!!

மார் இடைவளியிலில்லை
மன சிகரத்தில் உள்ளது
என பெண்டிர் படித்த தாசன் நீயே
என்ன தவம் செய்தேன்
நான் உன்னை பெற !!!!!

என்னக்காக நீ எழுதிய முதல் கவிதை
" போதிமரத்தடி உன் மடி
பற்றற்றேன் உலகத்தில் உன்னை தவிர "
பதிந்துபோனது  என் இதயத்தில் மச்சமாய் !!!

தவிப்பை உன்  தோழனாக்கி
என்னுடன் சண்டையிடும் அவனை
சமாதானம் செய்யும் அழகே
ஓர் இனிப்பு !!!!

என் மர்பாலில் சுவைஇல்லைஎன்று
பின்பு அமிர்தமும் சுவையற்றது
உவமை கூறினையே என்னுள்
பிறக்காதே குழந்தை நீ !!!!

ஸ்பரிசங்களால் வெப்பமுற்று
வெப்பம் தன்மையிழக்க
அணைத்துகொண்டு
என்னை முழுமையாக்கினாய் !!!!

உன் பரந்த மார்பு
என் படுக்கை அறையானது
தினமும் !!!!

கருமேகத்தில் கருவிற்றியருக்கும் மழைபோல
என் கார்கூந்தைலில் புதைந்துள்ள
உன்னை காற்றை போல
தலைகோதி கலைத்திடமட்டேன் !!!!

கண்ணிர் துளியும் என்னுள்
அயர்ந்து தூங்கிவிட்டது
உன்னுடன் வாழும் இந்த
இன்ப தாலாட்டை கேட்டு !!!!

வெறுமையை முழுமையாக்கிய
உன்னை மறுமையிலும் பெற
என்ன தவம் செய்ய நான் ?