Monday, November 1, 2010

என்ன தவம் செய்தேன்

சூரியன் பற்பசைக்கு விளம்பரம்
செய்து கொண்டீருக்கும் வேளை !!!
நீ தந்து போன முத்தத்தை கவர்ந்து
விடுவனோ? என்று பதறி எழுந்தேன்   !!!

அருகில் நீ வைத்துபோன  தேநீர் கோப்பையுடன்
பரிசு !!! நினெவுலகில் முழுவதும்  நீ
நான் மறந்தேன் என்னை !!!

பெண்மைக்கு இலக்கணம் கொடுத்து
நம்பிக்கைக்கு உன்னை கொடுத்து
தந்தையின் அன்பை பிறழசெய்த தாயுமானவனே
என்ன தவம் செய்தேன்
 நான் உன்னை பெற !!!!!


ஆத்மா கலந்து
மௌனம் பிறந்து
கண்களால் உன்னுடன் பேசிய
ஒவ்வொரு வினாடியும் தேவ வினாடிகள்
என்ன தவம் செய்தேன்
நான் உன்னை பெற !!!!!

மார் இடைவளியிலில்லை
மன சிகரத்தில் உள்ளது
என பெண்டிர் படித்த தாசன் நீயே
என்ன தவம் செய்தேன்
நான் உன்னை பெற !!!!!

என்னக்காக நீ எழுதிய முதல் கவிதை
" போதிமரத்தடி உன் மடி
பற்றற்றேன் உலகத்தில் உன்னை தவிர "
பதிந்துபோனது  என் இதயத்தில் மச்சமாய் !!!

தவிப்பை உன்  தோழனாக்கி
என்னுடன் சண்டையிடும் அவனை
சமாதானம் செய்யும் அழகே
ஓர் இனிப்பு !!!!

என் மர்பாலில் சுவைஇல்லைஎன்று
பின்பு அமிர்தமும் சுவையற்றது
உவமை கூறினையே என்னுள்
பிறக்காதே குழந்தை நீ !!!!

ஸ்பரிசங்களால் வெப்பமுற்று
வெப்பம் தன்மையிழக்க
அணைத்துகொண்டு
என்னை முழுமையாக்கினாய் !!!!

உன் பரந்த மார்பு
என் படுக்கை அறையானது
தினமும் !!!!

கருமேகத்தில் கருவிற்றியருக்கும் மழைபோல
என் கார்கூந்தைலில் புதைந்துள்ள
உன்னை காற்றை போல
தலைகோதி கலைத்திடமட்டேன் !!!!

கண்ணிர் துளியும் என்னுள்
அயர்ந்து தூங்கிவிட்டது
உன்னுடன் வாழும் இந்த
இன்ப தாலாட்டை கேட்டு !!!!

வெறுமையை முழுமையாக்கிய
உன்னை மறுமையிலும் பெற
என்ன தவம் செய்ய நான் ?

           

11 comments:

NaSo said...

உங்க கவிதை நல்லாருக்குங்க. இன்டிலி, தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைக்கவும். சந்தேகமிருப்பின் nagarajachozhan.ma@gmail.com தொடர்பு கொள்ளவும்.

Chitra said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///வெறுமையை முழுமையாக்கிய
உன்னை மறுமையிலும் பெற
என்ன தவம் செய்ய நான் ?///

கவிதையின் கடைசி வரிகள் அழகா முடிச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்.. :-))

பகிர்வுக்கு நன்றி..

Thanglish Payan said...

@ nagaraja

Thanks for your comments and i have mailed you.

@ Chitra
Wish you belated diwali wishes..

@Ananthi
That is the first line, when i think about the poem..
Thanks very much for your comments

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
This comment has been removed by the author.
Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

Yeah, that line is really superb... Keep writing beautiful kavithai's :-))

Philosophy Prabhakaran said...

இன்றுதான் உங்கள் வலைப்பூவிற்கு முதல் முறையாக வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது...வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

ஹேமா said...

அப்படியே உணர்வை எழுத்தாய்க் கொட்டியிருக்கிறீர்கள்.இதே அன்பு என்றும் நிலைத்திட வாழ்த்துகள்

Thanglish Payan said...

@ Ananthi
Sure. I will try my level best.
Once again thanks for your comments

@Prabhakaran
You are welcome and thanks for your comments

@hema
Thanks for your lovable comments.

Anonymous said...

சூப்பரா இருக்கு

Thanglish Payan said...

@ R.K Sathishkumar

Thanks for your comments.